Wednesday, June 23, 2010

இராயபேட்டை EA Mall புகைப்படங்கள்

நான் முதல் முறையாக அமெரிக்க பயணம் மேற்கொண்டபோது சிகாகோ நகரில் உள்ள பெரிய ஷாப்பிங் மால்களை கண்டு வியப்பில் ஆழ்ந்ததுண்டு. சிகாகோவிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ளது schaumburg என்ற சிறிய கிராமம். அங்குள்ள woodfield ஷாப்பிங் மால் மிக பிரம்மாண்டமானது. ஆனால் அது அமெரிக்காவின் சுமாரான ஷாப்பிங் மால்களில் ஒன்றுதான். நம்மூரில் அது போன்ற ஒரு ஷாப்பிங் மால் இனி கட்டப்பட வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவ்வளவு பெரிய ஷாப்பிங் மால் கட்ட நம்மிடம் இடம் இல்லை.

சென்னையில் ஸ்பென்சர்ஸ், சிட்டி சென்டர் மற்றும் புதிய ஸ்கை வாக் ஆகிய ஷாப்பிங் மால்களையே பார்த்து போரடித்து போனவர்களுக்கு புதிதாக திறக்கபடவுள்ள EA Mall புதிய உற்சாகத்தை அளிக்கப்போகிறது.


ஜூலை இறுதியில் இந்த வணிக வளாகத்தில் சத்யம் திரையரங்கும் திறக்கப்படும் என்பது கூடுதல் மகிழ்ச்சி.


சென்னையில் மாறிவரும் கலாச்சார மாற்றத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த புதிய ஷாப்பிங் மால்கள் உருவாகி வருகின்றன.


இந்த புதிய ஷாப்பிங் மாலின் சில புகைப்படங்கள் வலையில் கிடைத்தன. சென்னையில் முதல் முறையாக உலக தரத்திற்கு ஒரு ஷாப்பிங் மால். புகைப்படங்களை பாருங்கள். உங்களுக்கே புரியும்.
 











  

Saturday, June 12, 2010

இராவணன் ஜெயிப்பானா?

இன்னும் ஒரு வாரம் உள்ளது. ஆனால் இராவணன் இப்பொழுதே பிரபலமாகிவிட்டான். அதிக திரை அரங்குகளில் திரையிடப்படுவதால் முதல் வாரத்திலேயே முடிவு தெரிந்துவிடும். முக்கிய நட்சத்திரங்கள் பலர் திரையில் தோன்ற இருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்ப்பு என்னவோ மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரெஹ்மான் இருவர் மீதுதான்.ஏ ஆர் ரெஹ்மானின் வெற்றி அவரது பாடல்களின் மூலம் ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அவரது பாடல்களுக்கு இளைஞர் பட்டாளம் முற்றிலுமாக அடிமையாகிவிட்டது.


இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியிடப்படுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை விக்ரமின் ரசிகர்களுக்கு மணிரத்னம் இயக்கம் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி, இரட்டிப்பு எதிர்பார்ப்பு.


ஐஸ்வர்யா அபிஷேக் ஜோடி மிகுந்த விளம்பரத்தை தேடி தந்துள்ள நிலையில், தமிழில் விக்ரமின் ஜொலிப்பு கொஞ்சம் மங்களாகவே உள்ளது. உலகம் முழுவதிலிருந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது இந்தி வெளியீட்டை தான். இது கொஞ்சம் வருத்தத்தை தந்தாலும்  விக்ரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் நாமும் காத்திருப்போம். ராவணன் வரவுக்காக.


சென்னை பாமரன்.

Sunday, June 6, 2010

சென்னையில் ஒரு மழைக்காலம்

சென்னையில் நேற்று தொடங்கிய சிறு தூறல் இன்றும் சில இடங்களில் நீடிக்கிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்தல் ஏற்பட்ட வெப்ப சலனமே இந்த மலைக்கு காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

அனால் என் பாமர அறிவிற்கு இது புரிந்தபாடில்லை. கடந்த நான்கு மாதங்களாகவே வெயில் வாட்டி வதைக்கிறது. அதில் கடந்த ஆறு வாரங்களை நினைத்தாலே வியர்க்கிறது. அப்படியிருக்க இந்த வெப்ப சலனம் ஏன் கடந்த ஆறு வாரங்களில் ஏற்படவில்லை?

அது சரி. காரணம் என்னவயிருந்தல் என்ன. மழை பெய்தால் சரி. இந்த உடைந்த சாலைகளையும் சரி செய்யப்படாத கழிவு நீர் துளைகளையும் நினைத்தால் கொஞ்சம் எரிச்சல் எட்டிப்பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. போதாகுறைக்கு இந்த பெட் புயல் வந்து தென்மேற்கு பருவமழை நம்பிக்கையை கொஞ்சம் அசைத்துவிட்டு போய்விட்டது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பு எத்தனை சதம் நிஜமாகும் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய பொழுது முடிந்தது.

நாளை சந்திப்போம்.

சென்னை பாமரன்

பாமரனின் பார்வையில் சென்னை!

நன் ஒரு எழுத்தாளனோ கவிஞனோ அல்ல. பாமரன்.


சென்னையின் ஒவ்வொரு நிகழ்விலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கபடுபவன். தினசரி நிகழ்வுகளால் நிதம் அலைகழிக்கப்பட்டு அந்த நிகழ்வுகளையே பேசி பொழுது போக்குபவன். டீக்கடை பெஞ்சுகளிலும் அலுவலக உணவகங்களிலும் கடற்கரையிலும் பேருந்து நிறுத்தங்களிலும் என்னை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

தமிழை வளர்ப்பது எனது நோக்கமல்ல. அதற்கென்று பலர் இருக்கின்றனர். என்னை சுற்றிலும் உள்ள என்னை போன்ற நண்பர்களுடன் அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்தாலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆர்வம் மிகுந்ததால் இந்த வலைப்பதிவை உருவாக்குகிறேன்.

இந்த வலைப்பதிவின் மூலம் உலகெங்கிலும் உள்ள நண்பர்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். எனது எழுத்து நடையிலோ தமிழிலோ இலக்கண பிழை அல்லது இதர பிழைகள் இருந்தால், ஒரு பாமரன் தினசரி செய்யும் தவறுகளில் ஒன்றாக அதை கருதுங்கள். உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.



சென்னை பாமரன்